சுடச்சுட

  

  அகத்தீஸ்வரர் கோயில் குளத்துக்கு சுற்றுச்சுவர்: அமைச்சரிடம் எம்எல்ஏ வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 08th November 2017 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ramachandran

  பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயிலில் குளத்தை ஆய்வு மேற்கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் (வலமிருந்து இரண்டாவது).

  பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் குளத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பி. பலராமன் கோரிக்கை விடுத்துள்ளார். 
  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆரணி ஆற்றங்கரையோரம், ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 
  இதன் முன்புறம் 16 கால் மண்டமும், அதன் அருகில் திருக்குளமும் உள்ளது. 
  இக்குளத்து நீர் பொன்னேரி பகுதிக்கு நிலத்தடி நீராதாரமாக விளங்குகிறது. தற்போது பெய்த கனமழை காரணமாக குளத்தில் நீர் முழுவதுமாக நிரம்பியுள்ளது. அமைச்சர் ஆய்வு: இந்நிலையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பொன்னேரி அகத்தீஸ்வர் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை திடீரென வருகை தந்து ஆய்வு செய்தார். அவருடன் வந்த பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பி.
  பலராமன், பழைமை வாய்ந்த இந்த கோயில் குளத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்ற பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அமைச்சரிடம் தெரிவித்து நிறைவேற்றித்தரும்படி வலியுறுத்தினார். 
  இதனையடுத்து சுற்றுச்சுவர் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். 
  இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில், அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 
  அதில் உடைந்த நிலையில் உள்ள கோயில் உட்பிரகார, வெளிப்பிரகார சுவர்கள் மற்றும் குளத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  இதையடுத்து மெதூர் பர்வதீஸ்வரர் கோயில், மேலூர் திருவுடையம்மன் கோயிலுக்கும் சென்று அமைச்சர் ஆய்வு செய்தார். 
  அமைச்சருடன் இந்து சமய அறநிலையத்துறை திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் ஜான்சிராணி, ஆய்வாளர் பிரகாஷ், செயல் அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, வள்ளுவன் உள்ளிட்ட அதிகாரிகள் வந்திருந்தனர்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai