Enable Javscript for better performance
அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    பெரியபாளையம் அருகே சித்தராஜகண்டிகை பகுதியில் திங்கள்கிழமை இரவு மர்ம நபர்கள் 3 வீடுகளுக்குள் புகுந்து பணம், நகைகளைத் திருடி சென்றுள்ளனர்.
    சித்தராஜகண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (55). செல்வம், அவரது மனைவி திங்கள்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். மர்ம நபர்கள் நள்ளிரவு வீட்டினுள் புகுந்து ரூ. 45 ஆயிரம் ரொக்கம், 4 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். 
    அதேபோல அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளம்மாளின் (65) வீட்டிலும் புகுந்து, ரூ. 5, 600 ரொக்கம், கால் சவரன் மூக்குத்தி ஆகியவற்றை திருடி சென்றனர். 
    மேலும் அப்பகுதியில் அருண்குமாரின்(22) இரவுப் பணிக்கு சென்ற நிலையில் மர்ம நபர்கள் இவரது வீட்டிற்குள் புகுந்து மடிக்கணினியை திருடிச் சென்றுள்ளனர்.
    இந்த தொடர் திருட்டு குறித்த மூவரும் செவ்வாய்க்கிழமை கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai