சுடச்சுட

  

  ஊத்துக்கோட்டையில் கந்து வட்டி வாங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் செவ்வாய்க்கிழமை பைனான்சியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 
  ஊத்துக்கோட்டை சுதர்சனம் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நாகலாபுரம் ரோட்டைச் சேர்ந்த பைனான்சியர் துளசிராமனிடம் ரூ. 1 லட்சம் கடன் வாங்கினாராம். அதற்கு இதுவரை ரூ. 3 லட்சம் வரை வட்டி செலுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் துளசிராமன் அடிக்கடி செல்வத்தின் வீட்டுக்குச் சென்று கூடுதலாக வட்டி தரும்படி நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து செல்வம் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
  அதன்பேரில் ஆய்வாளர் பரந்தாமன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி துளசிராமனை கைது செய்தார். பின்னர் அவரை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai