கந்து வட்டி வசூலித்தவர் கைது
By DIN | Published on : 08th November 2017 03:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தொழிலாளியிடம் கந்து வட்டி வசூலித்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருவாலங்காடு ஒன்றியம், காவேரிராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஏகு மகன் தேவேந்திரன்(44). தொழிலாளி. இவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு கனகம்மாசத்திரம் பஜார் தெருவில் வசிக்கும், அல்லிமுத்து மகன் செந்தில்குமார் (27) என்பவரிடம், ரூ. 15 ஆயிரம் கடனாக வாங்கினார்.
இதற்கு, மாதத்திற்கு, 100 ரூபாய்க்கு, 5 ரூபாய் வட்டி வீதம் செந்தில்குமார் வசூலித்தாகக் கூறப்படுகிறது. மேலும் தேவேந்திரன் கடந்த மாதம் வட்டி கொடுக்காததால், செந்தில்குமார், அவரை வட்டியுடன் பணத்தைத் திருப்பி தருமாறு மிரட்டியுள்ளார். இதையடுத்து, தேவேந்திரன் கனகம்மாசத்திரம் போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்தனர்.