சுடச்சுட

  

  திருவள்ளூர் அருகே ரயில்வே பாதுகாப்பு படை காவலர் வீட்டில் 3 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் குருசாமி (35). இவர் புட்லூர் உல்லாச நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் கடந்த 1-ஆம் தேதி புறப்பட்டு சேரன்மாதேவியில் உள்ள பக்தவச்சலம் கோயிலுக்குச் சென்றனர். திரும்பவும் திங்கள்கிழமை இரவு ஊர் திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். 
  பீரோவையும் உடைத்து அதிலிருந்த 3 சவரன் நகை மற்றும் விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
  இதுகுறித்து, செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் குருசாமி புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai