Enable Javscript for better performance
குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம்: உறவினர் வீடுகளில் கிராம மக்கள் தஞ்சம்- Dinamani

சுடச்சுட

    

    குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம்: உறவினர் வீடுகளில் கிராம மக்கள் தஞ்சம்

    By DIN  |   Published on : 08th November 2017 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kanima_nagar

    திருவள்ளூர் அருகே இருளர் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் வெளியேறிய மக்கள், முகாம்களில் தங்க வசதி செய்து தராததால் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 
    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த கன்னியம்மா நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஆட்சியர் எ. சுந்தரவல்லி, கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
    அப்போது பாதுகாப்பு இல்லாத நிலையில் இருளர் குடியிருப்புகளில் வசித்து வந்த 58 பேர் வெண்மணப்புதூர் தொடக்கப்பள்ளியில் அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது, அங்கு போதிய உணவு வசதி செய்து தரவில்லை எனத் தெரிய வருகிறது. அதோடு, முகாம்களில் இரவில் மட்டும் தங்கும்படி அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த 58 பேரும் மீண்டும் தங்களது வீடுகளுக்குத் திரும்பினர்.
    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அப்பகுதியில் கனமழை பெய்து அதிக வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர்கள் எங்கும் செல்ல முடியாமலும், அரசு உதவியில்லாமலும் தவித்தனர். திங்கள்கிழமை வீடுகளைக் காலி செய்து மூட்டை முடிச்சுகளுடன் தங்கள் உறவினர் வீடுகளுக்குச் சென்றனர். 



     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai