Enable Javscript for better performance
கைதி தப்பி ஓட்டம்: காவலர் இடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவல் நிலைய சிறையில் வைக்கப்பட்டிருந்த கைதி தப்பி ஓடியதைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 
    திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள செல்லிடப்பேசி கடையில் ஒரு இளைஞர் செல்லிடப்பேசியை திருடிக்கொண்டு தப்பி ஓடினார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள்அவரை பிடித்து தர்மஅடி கொடுத்து, திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    பின்னர் போலீஸார் அவரை விசாரணை செய்ததில் அவர் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த விஜய் என்பதும், இவர் மீது ஏற்கெனவே 15 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. 
    இதையடுத்து காவல் நிலையத்தில் பூட்டு போடாத சிறையில் விஜய் வைக்கப்பட்டிருந்தார். பாதுகாப்புப் பணியில் தலைமைக் காவலர் தேவன் இருந்தார்.
    இந்நிலையில், அதிகாலை 4 மணியளவில் தலைமைக் காவலர் தேவன் தூக்கத்தில் இருந்ததால் கதவைத் திறந்து கொண்டு விஜய் தப்பி ஓடிவிட்டார். 
    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி பணியின் போது கவனக்குறைவாக இருந்ததாக தலைமைக் காவலர் தேவனை (45) பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai