Enable Javscript for better performance
திருவள்ளூர்: முழுவதுமாக நிரம்பிய 193 ஏரிகள்- Dinamani

சுடச்சுட

    
    tiruvallur

    ப்பார் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீரில் நின்று செல்பி எடுக்கும் இளைஞர்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 193 ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. 
    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் அருகே பிஞ்சிவாக்கம், பாப்பரம்பாக்கம், சத்தரை, கூவம், இருளஞ்சேரி, பொன்னேரி பகுதியில் பெரும்பேடு, வேம்பேடு, ஆவூர், செங்குன்றம் பகுதியில் லட்சுமிபுரம் உள்ளிட்ட மொத்தம் 193 ஏரிகள் மற்றும் குளங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. அதேபோல், 200-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களில் 75 சதவீதம் நீர் நிரம்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதில் ஒரு சில பகுதிகளில் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு ஏரிகள் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளாதது போன்ற காரணங்களால் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் வெற்று நிலங்களிலும், குடியிருப்புப் பகுதியிலும் சூழ்ந்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 
    இதுகுறித்து விவசாயி தனசேகரன் கூறியதாவது: பம்பரம்பாக்கம் ஏரியில் 250 ஏக்கரும், பிஞ்சிவாக்கம் சப்பார் ஏரியில் 300 ஏக்கர் விவசாய நிலங்களும் பயன்பெற்று வருகின்றன. கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால், ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த மழைக்கு முன்னதாக ஏரிக் கரையை பலப்படுத்தி, ஆழப்படுத்தியிருந்தால் இரு போகத்துக்கான நீரை சேமித்து வைத்திருந்திருக்கலாம். இந்த ஏரி முறையாக தூர்வாரப்படாததால், தற்போது பெய்த வடகிழக்குப் பருவமழையில், ஏரி முழுவதும் நிரம்பி, கலங்கல் வழியே கூவம் ஆற்றில் வீணாகி வருகிறது. 
    இதுபோன்ற நீர் ஆதாரம் உள்ள ஏரிகளை பராமரித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றினால் அதிக விவசாய நிலங்கள் பயன்பெறும் என்றார். 
    கும்மிடிப்பூண்டியில் அதிகபட்ச மழை... 
    திருவள்ளூர் மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டரில்) : கும்மிடிப்பூண்டி- 36, பொன்னேரி - 28, அம்பத்தூர் - 26, செம்பரம்பாக்கம் - 22.40, திருவாலங்காடு - 9, திருவள்ளூர் - 9, பூண்டி - 8.20, பூந்தமல்லி -7.50, செங்குன்றம் - 5.40, சோழவரம் - 5, தாமரைப்பாக்கம் - 3மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai