சுடச்சுட

  

  மாணவர்களுக்கு டெங்கு பாதிப்பு: பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு

  By DIN  |   Published on : 08th November 2017 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாணவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து திருவள்ளூர் அருகே தனியார் பள்ளியில் அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
  திருவள்ளூர் பகுதியில் மணவாளநகர் தனியார் மெட்ரிக். உயர்நிலைப் பள்ளி யில் 2 மாணவர்களுக்கும், மேல்நல்லாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி யில் ஒரு மாணவருக்கும், கொக்கூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒரு மாணவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 
  அதைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பள்ளிகளான திருவள்ளூர் மணவாளநகரில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில், கடம்பத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ், ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவர் காந்திமதி, சுகாதார மேற்பார்வையாளர் ரவிசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்தப்பள்ளியில் உள்ள வகுப்பறைகள், சுற்றுப்புறப் பகுதிகளை ஆய்வு செய்தனர். 
  அதோடு, சுகாதார கழிப்பறை வளாகம் போன்ற இடங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையிலும், சுகாதாரக்கேடு ஏற்படும் வகையிலும் உள்ளனவா என பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து குடிதண்ணீர், மேல்நிலைத் தொட்டிகள் ஆகியவைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதேபோல், கொக்கூர் மற்றும் மேல்நல்லாத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai