சுடச்சுட

  
  flood

  ரெட்டம்பேடு பகுதியில் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள்

  கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடுப் பகுதியில் விளை நிலங்களில் வெள்ளம் புகுந்ததால் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
  வடகிழக்குப் பருவ மழை காரணமாக கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரத்தில் அதிக அளவு மழை பெய்து வருவதால் ஏரிகள், குளங்கள், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 
  ஞாயிற்றுக்கிழமை மாலை ஏடூர் ஊராட்சிக்கு உள்பட்ட கும்புளி பகுதியில் குடியிருப்புகளிலும், கும்புளி சாலையிலும் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் அங்கு விரைந்து சென்று இரவு 11 மணி வரை போராடி கால்வாய்கள்
  அமைத்து மழை வெள்ளத்தை கால்வாய் மூலம் ஊருக்குள் 
  நுழையாதபடி தடுத்தனர்.
  அதேபோல புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் ஏற்பட்ட ஏரி உடைப்பை மணல் மூட்டைகள் கொண்டு அடைத்து உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  இந்நிலையில், ரெட்டம்பேடு பகுதியில் மழை வெள்ளம் விவசாய பயிர்களுக்குள் புகுந்து சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களை பாழாக்கி உள்ளது. 
  இதனைத் தொடர்ந்து மழை நீரை அகற்றும் வகையில் கால்வாய் வெட்டப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 
  மேலும், மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசுத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai