சுடச்சுட

  
  meet

  கும்மிடிப்பூண்டியை அடுத்த ஓபசமுத்திரம் பகுதியில் 9 பேருக்குச் சொந்தமான 14 இறால் பண்ணைகளை விஷம் வைத்து அழித்த சம்பவத்தில், தொடர்புடைய நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் பாதிக்கப்பட்ட உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என இறால் பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
  ஓபசமுத்திரம் பகுதியில் அரசு அனுமதியோடு இறால் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இறால் பண்ணைகளால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் இந்த பண்ணைகளை அகற்றுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருந்தனர். நீர் நிலைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனக் கூறி பண்ணைகளை தொடர்ந்து நடத்த அதிகாரிகள் தரப்பு கூறிய நிலையில், அவை தொடர்ந்து செயல்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓபசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் இந்த இறால் பண்ணைகளில் விஷத்தைக் கலந்ததால் இறால்கள் அனைத்தும் இறந்தன.
  இதனால், வஜ்ஜிரவேலுவின் (62) பண்ணையில் 50 லட்சம் ரூபாயும், ரவி (25), சின்னதுரை (27) ஆகியோரின் பண்ணையில் 10 லட்சம் ரூபாயும், பி.ஏ.முருகன்(37) பண்ணையில் 25லட்சம் ரூபாயும், இதேபோல, ஓ.ஜி.நாராயணசாமி(60), ஆர்.பாலாஜி (36), ஏ.கணேசன் (37), எஸ்.சம்பத் (36), ஏ.முருகன்(37), சரவணன்(34), இந்துமதி(53), தனபால்(48) ஆகியோரின் பண்ணைகள் உள்பட மொத்தம் இரண்டரை கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பண்ணை உரிமையாளர்கள் 9 பேரும் ஆரம்பாக்கம் காவல் நிலையம், உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு அளித்துள்ளனர்.
  இது தொடர்பாக வனஜா (42), சண்முகம் (42) ஆகிய இருவர் ஆரம்பாக்கம் போலீஸாரால் திங்கள் கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
  இந்நிலையில் புதன்கிழமை இறால் பண்ணை உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுக்கால் குப்பத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பண்ணை விவசாயிகள் சங்க நிர்வாகி பரிமளம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அரசு, ஜெயசீலன், ஆறுமுகம், ராமஜெயம், மருத்துவர் சண்முகம், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இறால், மீன் வளர்ப்பு உரிமையாளர்கள் சங்க ஆலோசகர் விழுப்புரம் ஏ.என்.செந்தில் கலந்துகொண்டு விஷம் காரணமாக ஆலோசனைகளை வழங்கினார்.
  தொடர்ந்து, இறால்களை விஷம் வைத்துக் கொன்ற நபர்களை கண்டித்து ஆர்ப்பாட்டமும், மேற்கண்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai