சுடச்சுட

    
    meet1

    செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் ஒரு கோடியே 8 லட்சம் மதிப்பிலான புதியதாக கட்டப்பட்ட வேளாண்மைத் துறை ஊரகக் கிடங்கை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார். 
    தமிழக வேளாண்மைத் துறை சார்பாக பாடியநல்லூரில் ஊரகக் கிடங்கு கட்டப்பட்டது. இந்த கிடங்கில் விவசாயிகள் விளைவிக்கும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த கிடங்கை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். 
    இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சித்திரசேன நாயர், துணை இயக்குநர் திலகவதி, உதவி இயக்குநர் வத்சலா, உதவி வேளாண்மை அலுவலர் பாஸ்கரன், கிடங்கு கண்காணிப்பாளர் செந்தாமரை ஆகியோர் கிடங்கை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அளித்தனர். 
    இந்த நிகழ்ச்சியில் சோழவரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கார்மேகம், செங்குன்றம் நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கோபி, ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ. சக்குபாய், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மனோகரன் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai