சுடச்சுட

  
  lake

  சென்னை புறநகரில் உள்ள இரண்டு பெரிய ஏரிகளில் ஒன்று, 418 ஏக்கர் பரப்பளவு கொண்ட அம்பத்தூர் ஏரியும், மற்றொன்று 596 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொரட்டூர் ஏரியும் ஆகும். 
  இரண்டு ஏரியையும் பாதுகாக்கவேண்டிய அரசுத்துறை, அலட்சியமாக நடந்துகொள்வதால், பல்வேறு ஆக்கிரமிப்புகளால் ஏரியின் பரப்பளவு சுருங்கிக்கொண்டே வருகிறது.
  ஏரியைப் பாதுகாக்கவேண்டிய வருவாய்த்துறையும், பொதுப்பணித்துறையும் வீணடிப்பதில் போட்டியிடுகிறது என மக்கள் வேதனைப்படுகின்றனர்.
  கொரட்டூர் ஏரியில் ரசாயன கழிவு நீரும், அம்பத்தூர் ஏரியில் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் கலக்கிறது. 
  கால்வாய்மூலம் கழிவுநீர் கலப்பதை பொதுநலச்சங்கங்கள், சமுகஆர்வலர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டுசென்றாலும் பெரிய மாற்றங்கள்நிகழ்ந்து விடுவதில்லை.
  இதனால் இரண்டு ஏரிகளும் விரைவில் கழிவுநீர் குட்டைகளாக மாறும் அவலநிலை ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 
  அம்பத்தூர் ஏரி: இதில் சுமார் 50 ஏக்கர் நிலம் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் மூலம் எடுக்கப் பட்டு வீடு இல்லாதவர்களுக்கு அரசால் வழங்கப்பட்டது. மீதமுள்ள சுமார் 368 ஏக்கர் ஏரியாக உள்ளது. 
  இந்த ஏரியை பொதுப்பணித்துறை சரிவர பராமரிக்காமல் இருப்பதால் ஒருபுறம் அயப்பாக்கம் வீட்டுவசதி வாரியக்குடியிருப்பிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் மூலம் கொண்டுசெல்லப்பட்டு ஏரிக்குள் விடப்படப்படுகிறது. ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. இதனால் ஏரி மாசடைந்துவருகிறது. 
  விரைவில் கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, அம்பத்தூர், கொரட்டூர், அயப்பாக்கம், திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டம் உயரும் என்று பொதுநலச் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai