Enable Javscript for better performance
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்- Dinamani

சுடச்சுட

    
    river

    திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மீன் பிடித் தொழிலாளர்கள் மீன் பிடிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். 
    திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக ஏரி, குளங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு பெய்துவரும் தொடர் மழையால் சித்தூர் அருகே அம்மன் பள்ளி அணை நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது.
    பள்ளிப்பட்டு அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றின் வழியாக தில்லிஅகரம் , நெடியம், சமத்துவாடா, நாராயணபுரம் வழியாக வந்து பூண்டி ஏரியில் வந்து சேருகிறது. 
    இந்நிலையில், தொடர்மழை காரணமாக கடந்த 3 நாள்களாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள விவசாயக் கிணறுகளுக்கும், ஏரி, குளங்களுக்கும் நீர்வரத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    மேலும், ஆற்றோர பகுதி கிராமங்களான நாராயணபுரம், புதூர், பட்டரைபெரும்புதூர் ஆகிய கிராமங்களில் வசித்து வரும் மீன்பிடித் தொழிலாளர்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
    சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஏரியின் மொத்த உயரம் 35 அடியாகும். தற்போது, 24.35 உயரம் நீர்மட்டம் உள்ளது. 
    இதன் கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி ஆகும். தற்போது, 756 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. தற்போது மழை நீர்வரத்து காரணமாக, ஏரிக்கு 11.72 ஆக 23.39 சதவீதம் இருப்பு உள்ளது. 
    இதுகுறித்து நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி மணி கூறுகையில், இதற்கு முன்பு கடந்த 2015-இல் தான் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
    அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் முதல் வெள்ள நீர்வரத்து அதிகரித்தது. 
    தற்போது, 3 நாள்களாகத்தான் அதிக நீர்வரத்து உள்ளது. இதனால் கடந்த 2 நாள்களாக வலைவீசி மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இதேபோல், 3 மாதங்களுக்கு இந்த ஆற்றில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோம் என்றார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai