சுடச்சுட

  
  fire

  திருத்தணி அருகே சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றிக் கொண்டதில் கூரை வீடு எரிந்து நாசமானது. 
  திருத்தணி ஒன்றியத்துக்கு உள்பட்டது முஸ்லிம் நகர். இங்கு 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில், அமீரின் தாய் ஆயிஷா கூரை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். புதன்கிழமை ஆயிஷா எரிவாயு சிலிண்டர் மூலம் சமையல் செய்துகொண்டிருந்தார்.
  அப்போது அவரது மகனிடம் இருந்து அழைப்பு வந்தது. மகனிடம் ஆயிஷா சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போது, எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றிக்கொண்டது. சற்று நேரத்தில் தீ மளமளவென பரவி கூரை வீடு முழுவதும் எரிந்தது. அப்போது மூதாட்டியை கிராம மக்கள் பத்திரமாக மீட்டு, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
  அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிவாயு சிலிண்டர் வெடிக்கும் முன் வீடு முழுவதும் பரவிய தீயைக் கட்டுப்படுத்தினர். இதனால் அருகில் இருந்த வீடுகளுக்கு தீ பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் வீட்டில் இருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள் முற்றிலும் எரிந்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai