Enable Javscript for better performance
செங்குன்றத்தில் நோய் தடுப்பு மருத்துவ முகாம்கள்- Dinamani

சுடச்சுட

    
    medical_camp

    செங்குன்றத்தில் நோய் தடுப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. 
    திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவின்பேரில் செங்குன்றத்தில் உள்ள 18 வார்டுகளிலும், வடகரை, தீர்த்தகரியாம்பட்டு, அழிஞ்சிவாக்கம், கிராண்ட்லைன், விளாங்காடுபாக்கம் ஆகிய ஊராட்சிகளிலும் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் பா.ஜோஸ்பின் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட நோய்த் தடுப்பு மருத்துவ முகாம்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. மழைக்காலங்களில் காய்ச்சல் வராமல் இருக்க பொதுமக்களுக்கு நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, குழந்தைகளுக்கு காய்ச்சல் வராமல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai