திருத்தணி அருகே வரும் 15-இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
By DIN | Published on : 09th November 2017 02:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருத்தணி அருகே வரும் 15 ஆம் தேதி பொதுமக்கள் பயன்பெறும் நோக்கத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற இருக்கிறது.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாவட்டத்தில் கொண்டுவரப்படும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் பெற்று பயனடைய வேண்டும். இதற்காக வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் இந்த முகாம் திருத்தணி வட்டத்தில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில் மேலே குறிப்பிட்ட நாளில் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த முகாமில் மாவட்ட அளவிலான அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்க இருக்கின்றனர். அதனால் , இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். இந்த மனுக்கள் அந்தந்த துறைக்கு அனுப்பி வைத்து நேரில்ஆய்வு செய்து தகுதியானோருக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.