சுடச்சுட

    

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் பெஞ்சமின் ஆய்வு

    By DIN  |   Published on : 09th November 2017 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    penjamin

    மாதவரம் பகுதியில் மழை வெள்ளம் பாதித்த இடங்களை அமைச்சர் பெஞ்சமின் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார். 
    சென்னையை அடுத்த மாதவரம் மண்டலத்துக்கு உள்பட்ட எலிசபெத் நகர், கணபதி சிவா நகர், ஆகிய பகுதிகளில் குடியிருப்பு
    களில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 
    அந்தப் பகுதிகளை ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், மண்டல கண்காணிப்பாளர் சந்தோஷ்பாபு, மண்டல அதிகாரி சங்கர், மண்டலக்குழு முன்னாள் தலைவர் வேலாயுதம், மண்டல செயற்பொறியாளர் சுந்தரசேன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது, அமைச்சர் பெஞ்சமின் ராட்சத மின் இயந்திரங்கள் மூலம் உடனடியாக மழைநீரை குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர் ரெட்டை ஏரியைப் பார்வையிட்டார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai