சுடச்சுட

  

  ஆத்துப்பாக்கம் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம்: வட்டாட்சியரின் காரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

  By DIN  |   Published on : 10th November 2017 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  car1

  கும்மிடிப்பூண்டியைஅடுத்த பெரியபாளையம் அருகே சின்ன ஆத்துப்பாக்கம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புதன்கிழமை அவ்வழியே வந்த வட்டாட்சியரின் காரை முற்றுகையிட்டனர்.
  இங்குள்ள செல்லியம்மன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டனர். ஆனாலும் அதிகாரிகள் வெள்ள நீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அவ்வழியே வந்த ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் கிருபா உஷாவின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 
  இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் அப்பகுதியைப் பார்வையிட்டு அங்கு தேங்கி இருந்த வெள்ள நீரை வெளியேற்ற வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் கால்வாய்கள் அமைத்து வெள்ள நீர் வடிய உரிய ஏற்பாடு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai