Enable Javscript for better performance
எண்ணூர் துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்ததாக 3 மீனவர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    எண்ணூர் துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்ததாக 3 மீனவர்கள் கைது

    By DIN  |   Published on : 10th November 2017 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எண்ணூர் காமராஜர் துறைமுக கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து, பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலரைத் தாக்கியதாக 3 மீனவர்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கார் உள்ளிட்டவை, கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதே போன்று நிலக்கரி, சமையல் எரிவாயு உள்ளிட்டவை கப்பல் மூலம் கொண்டு வரப்படுகிறது. எண்ணூர் துறைமுக வளாகம் முழுவதையும் பாதுகாக்கும் பணியில் 24 மணி நேரமும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுகின்றனர். புதன்கிழமை இரவு மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் பாசுமதேரி (35), அங்குள்ள கடலோரப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எண்ணூர் தாழாங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் செந்தில்குமார் (54), குப்பன்(48), சந்தோஷ் (24) ஆகியோர் பாதுகாக்கப்பட்ட கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அவர்கள் மூன்று பேரையும் பிடித்து பாசுமதேரி விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது அவரை மீனவர்கள் மூவரும் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. 
    இதைத் தொடர்ந்து, சக காவலர்கள் அங்கு வந்து 3 பேரையும் பிடித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மீனவர்கள் தாக்கியதில் காயமடைந்த பாசுமதேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிந்து, மீனவர்கள் மூவரையும் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai