சுடச்சுட

  

  குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் வட்டந்தோறும் குறிப்பிட்ட 
  கிராமங்களில் 11-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து ஆட்சியர் எ.சுந்தரவல்லி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் நோக்கத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை குறிப்பிட்ட கிராமங்களில் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
  இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் , நீக்குதல், முகவரிமாற்றம் ஆகிய பணிகளுக்கான சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.
  திருவள்ளுர்- ஒதிக்காடு, ஊத்துக்கோட்டை-கோட்டை குப்பம், பூந்தமல்லி-பாரிவாக்கம், திருத்தணி-அலமேலுமங்காபுரம், பள்ளிப்பட்டு-பாண்டாபுரம், பொன்னேரி-வன்னிப்பாக்கம், கும்மிடிப்பூண்டி-
  ஆரம்பாக்கம் , ஆவடி-பிரகாஷ் நகர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. 
  இந்த முகாமில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் விண்ணப்பங்களையும் அளித்து பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai