சுடச்சுட

  

  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் 18-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
  தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் தொடர்ந்து உதவித் தொகை பெறும் வகையில் தேசிய திறனாய்வு போட்டித் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. 
  இந்தாண்டுக்கான தேர்வு கடந்த 5-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறைக்கு அளிக்கப்பட்டிருந்தது. 
  இதுபோன்ற காரணங்களால் இத்தேர்வு, வரும் 18-ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai