சுடச்சுட

  

  திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் 11 இடங்களில் 'அம்மா திட்ட முகாம்' இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
  இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
  அனைத்து கிராம மக்களும் தங்கள் இருப்பிடங்களில் இருந்தே மனு அளிக்கும் வகையில் அம்மா திட்டம் என்ற வருவாய் திட்ட முகாம் வாரந்தோறும் குறிப்பிட் ட கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. 
  இதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் வட்டந்தோறும் 11 கிராமங்களில் அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் முகாம் நடைபெற இருக்கிறது. 
  இதன்மூலம், வருவாய்த் துறையின் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, குடிநீர் பிரச்னைகள், நிலம் சம்பந்தமான பிரச்னைகள் குறித்து கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம். இக்கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியானோருக்கு நலத்திட்ட உதவிகள் அன்றைய தினமே வழங்கப்பட உள்ளது. 
  மேலும், உடனடித் தீர்வு காணப்படாத மனுக்கள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு 30 நாள்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். 
  இந்த முகாம், பொன்னேரி-பெருங்காவூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருத்தணி - முத்துகொண்டாபுரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில், பூந்தமல்லி-கூடப்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில், ஊத்துக்கோட்டை-கூனிப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில், கும்மிடிப்பூண்டி-மணலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில், திருவள்ளுர்-ஆயலூர் கிராமத்தில் சமுதாயக்கூடத்திலும், 
  ஆவடி-அரக்கம்பாக்கம் கிராமம் சமுதாயக்கூடத்திலும், பள்ளிப்பட்டு-வேணுகோபாலபுரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், மதுரவாயல்-ராமாபுரம் வார்டு 155-இல் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், திருவொற்றியூர்-சின்னசேக்காடு சமுதாயக்கூடத்திலும், மாதவரம்-கதிர்வேடு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம் அருகிலும் வருவாய்த் திட்ட முகாம் நடைபெற உள்ளது. 
  அதனால், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு மனுக்களை அளித்து உரிய பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai