Enable Javscript for better performance
கடன் வாங்கியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கடன் வாங்கியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

    By  திருத்தணி,  |   Published on : 11th November 2017 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கந்து வட்டியை கொடுக்காததால், கடன் வாங்கியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
     திருத்தணி ரெட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தனஞ்செழியன்(39). இவர், கடந்த, 2012ஆம் ஆண்டு அக்கைய்யா நாயுடு சாலையைச் சேர்ந்த பாபுவிடம் (42), ரூ.1.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்கு, தனஞ்செழியன், பத்து நாள்களுக்கு ஒரு முறை, ரூ.300 வட்டியாக கொடுத்து வந்தார். இதைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு தன் தந்தையின் உடல் நலம் சரியில்லாததால், தனஞ்செழியன் மீண்டும் பாபுவிடம், ரூ.1.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதன்பின், மாதத்திற்கு ரூ.3000 வட்டி கொடுத்து வந்தாராம்.
     இந்நிலையில், சரியாக வட்டிப் பணம் வராததால் இரண்டு நாள்களுக்கு முன்பு பாபு, தனஞ்செழியன் வீட்டிற்கு நேரில் சென்று தகாத வார்த்தைகளால் பேசியும், பணம் கொடுக்காவிட்டால், கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தனஞ்செயன் அளித்த புகாரின்பேரில் திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாபுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai