சுடச்சுட

  

  குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

  By  திருவள்ளூர்  |   Published on : 11th November 2017 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  n4

  திருவள்ளூர் அருகே மழை நின்றும் வடியாமல் தேங்கி நிற்கும் நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
   திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் , வேப்பம்பட்டு ஊராட்சியில் பூம்புகார் நகர், வெங்கட்ராமன் நகர், சுதர்சனம் நகர், தசரதன் நகர், சக்திநகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை நீர் தேங்கி நிற்கிறது. அதோடு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீரும் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. துர்நாற்றம் வீசும் நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், கால்களில் அரிப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
   இதுகுறித்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பா.ஜ.க மாவட்ட தலைவர் லோகநாதன் கூறியதாவது: இந்தப் பகுதியில் மழை பெய்யும் போதெல்லாம் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது.
   மேலும் குடியிருப்பில் உள்ள கழிப்பறைகளிலும் நீர் நிரம்பி தெருவில் செல்கிறது. இதனால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதற்கான கழிவு நீர் வாய்க்கால் ரயில் நிலைய சாலையில் உள்ளது. அதை அப்பகுதி வியாபாரிகள் ஆக்கிரமித்து கட்டடம் அமைத்துள்ளனர். இதனால்தான் மழைநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது.
   குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால், இங்கு வசிப்பவர்கள் நாள்தோறும் ஒரு குடம் தண்ணீர் ரூ.8 விலை கொடுத்து வாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவு நீர் வாய்க்காலில் செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai