சுடச்சுட

  

  பன்னாட்டு ஆங்கில திறனறி தேர்வு: கும்மிடிப்பூண்டி மாணவி சாதனை

  By  கும்மிடிப்பூண்டி  |   Published on : 11th November 2017 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பன்னாட்டு அளவில் சென்னையில் நடைபெற்ற ஆங்கில திறனறி தேர்வில் கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவி வெற்றி பெற்றுள்ளார்.
   கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ்.மெட்ரிக் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி எம்.ஜி.கிறிஸ்டினா. இவர், பன்னாட்டு அளவில் செயல்பட்டு வரும் ஸ்பெல்பீ நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆங்கில திறனறிதல் போட்டியில் பங்கேற்றார். பல கட்டங்களாக நடைபெற்ற இப்போட்டியில், முதலில் மாவட்ட அளவிலும், தொடர்ந்து மாநில அளவிலும் கிறிஸ்டினா வென்றார். அதைத்தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று அதிலும் வென்று பன்னாட்டு அளவிலான போட்டிகளுக்குத் தேர்வானார்.
   இதையடுத்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பன்னாட்டு அளவிலான ஆங்கில திறனறிதல் போட்டி நடைபெற்றது. இதில் மாணவி கிறிஸ்டினா பங்கேற்று சிறப்பிடம் பெற்று வெற்றி பெற்றார். இது குறித்த அறிவிப்பு வெளியானதும், பள்ளி வளாகத்தில் மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
   இவ்விழாவுக்கு, டி.ஜெ.எஸ்.கல்விக் குழுமத் தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் டாக்டர் பழனி, பள்ளி முதல்வர் ஞானபிரகாசம், தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மாணவி கிறிஸ்டினாவின் சாதனையைப் பாராட்டினர். அவருக்குச் சான்றிதழ் மற்றும் பதக்கம் அணிவித்து ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai