Enable Javscript for better performance
மாணவர்களைப் புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களைப் புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரிக்கை

    By  திருத்தணி,  |   Published on : 11th November 2017 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதிய பேருந்துகள் இல்லாததாலும், பேருந்து நிறுத்தத்திலும் பல பேருந்துகள் மாணவர்களைப் புறக்கணித்து செல்வதால் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     திருத்தணியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அரசினர் கலைக்கல்லூரியும் இயங்கி வருகிறது.
     இதனால், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வருவதற்கு அரசுப் பேருந்துகளையே நம்பியுள்ளனர். காசிநாதபுரம், தரணிவராகபுரம், முருக்கம்பட்டு, பொன்பாடி, மத்தூர், மங்காபுரம், எச். அக்ரஹாரம், மேல் எட்டிகுப்பம், அகூர், நத்தம், கோரமங்கலம், விநாயகபுரம், மேதினிபுரம், நாணமங்கலம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் மாணவ - மாணவிகள் அரசு வழங்கிய இலவச பயண அட்டை மூலம் பயணம் செய்கின்றனர்.
     இந்நிலையில் கடந்த சில வாரங்களாக, தரணிவராகபுரம் கிராமத்தில் காலை 8 மணிக்கு மேல் வரும் அரசுப் பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதாகவும், இதனால், காலை நேர சிறப்பு வகுப்புகளை இழக்க நேரிடுகிறது எனவும் மாணவர்கள் கவலை தெரிவித்தனர்.
     எ. மத்தூர் - திருத்தணி வழித்தடத்தில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும், பேருந்து நிறுத்தங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்தி மாணவர்களை ஏற்றிச் செல்லும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai