Enable Javscript for better performance
"அம்மா' திட்ட முகாமில் 19 பேருக்கு நலத் திட்ட உதவி- Dinamani

சுடச்சுட

    

    "அம்மா' திட்ட முகாமில் 19 பேருக்கு நலத் திட்ட உதவி

    By  திருத்தணி,  |   Published on : 12th November 2017 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாலங்காடு ஒன்றியம், முத்துக்கொண்டாபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை "அம்மா' திட்ட முகாம் நடைபெற்றது. இதில் 19 பேருக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
     முகாமில், திருத்தணி சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரேணுகா, மண்டலத் துணை வட்டாட்சியர் பாரதி, வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களிடம் இருந்து மொத்தம் 97 மனுக்களைப் பெற்றனர்.
     இதில், 19 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 78 மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. வருவாய்த் துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
     இதேபோல ரா.கி.பேட்டை ஒன்றியம், வெடியங்காடு ஊராட்சிக்கு உள்பட்ட வேணுகோபாலபுரம் கிராமத்தில் நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமில் திருத்தணி, எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதலுக்கான ஆணைகளை வழங்கினார். ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளர் கே.ஜெயராமன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai