Enable Javscript for better performance
அரசுப் பள்ளிக்கு ரூ. 8 லட்சத்தில் மேஜை, நாற்காலிகள்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பள்ளிக்கு ரூ. 8 லட்சத்தில் மேஜை, நாற்காலிகள்

    By  திருத்தணி,  |   Published on : 12th November 2017 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் ரூ. 8 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலிகளை சனிக்கிழமை வழங்கினார்.
     திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1,700- க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மேஜை, நாற்காலிகள் இன்றி ஒரு சில வகுப்புகளில் தரையில் அமர்ந்து பயிலும் நிலை இருந்தது.
     இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினரிடம் மேஜை, நாற்காலிகள் கேட்டு கோரிக்கை வைத்திருந்தனர். அதைத்தொடர்ந்து, திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ. 8 லட்சம் ஒதுக்கீடு செய்து, புதிதாக 100 மேஜை, நாற்காலிகள் இப்பள்ளிக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டன.
     பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கேபிள் எம். சுரேஷ் முன்னிலை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் ஜெயசந்திரன் வரவேற்றார்.
     எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் கலந்துகொண்டு, ரூ. 8 லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலிகளை பள்ளிக்கு வழங்கினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai