சுடச்சுட

    

    கடையின் பூட்டை உடைத்து செல்லிடப்பேசிகள், பணம் திருட்டு

    By  திருவள்ளூர்,  |   Published on : 12th November 2017 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே கடையின் பூட்டை உடைத்து 6 செல்லிடப்பேசிகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை மர் ம நபர்கள் திருடிச் சென்றனர்.
     இதுகுறித்து, திருவள்ளூர் கிராமிய போலீஸார் கூறியதாவது:
     திருவள்ளூர் அருகே ஈக்காடு வி.எம்.என்.நகரைச் சேர்ந்தவர் எம்.சேகர் (49). இவர், இப்பகுதியில் நகலகம் மற்றும் செல்லிடப்பேசி விற்பனையகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் வெள்ளிக்கிழமை இரவு கடையைப் பூட்டிச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து, எப்போதும் போல் சனிக்கிழமை காலையில் கடையைத் திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான 6 செல்லிடப்பேசிகள் மற்றும் கல்லா பெட்டியில் இருந்த ரூ. 3 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
     இதுதொடர்பாக திருவள்ளூர் கிராமிய காவல் நிலையத்தில் சேகர் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai