சுடச்சுட

  

  காவலர் குடியிருப்பில் டெங்கு தடுப்புப் பணி: ஆட்சியர் ஆய்வு

  By  திருவள்ளூர்,  |   Published on : 12th November 2017 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் காவலர் குடியிருப்புப் பகுதியில் டெங்கு மற்றும் தொற்றுநோய் தடுப்புப் பணிகளை ஆட்சியர் எ.சுந்தரவல்லி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
   திருவள்ளூர் நகராட்சிக்குள்பட்ட காவலர் குடியிருப்புப் பகுதியில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுகாதாரக் கேடுகள் உள்ளனவா என்பது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, காவலர் குடியிருப்புகளில் உள்ள பெண்களிடம், வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், குடிநீர் வைக்கும் பாத்திரங்களை மூடி வைத்து பயன்படுத்துமாறும் வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து, குடியிருப்பு மேல் தளத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளையும் பார்வையிட்டார். அங்கு குடிநீர் எடுத்து வரும் பணியாளரிடம் வாரந்தோறும் சுத்தம் செய்து பராமரிக்குமாறு உத்தரவிட்டார்.
   அதைத் தொடர்ந்து, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அண்ணா நகர் பகுதிகளில் தொற்றுநோய் தடுப்பு சிறப்பு முகாமில் வீடுகள்தோறும் ஆய்வு செய்தார். அப்போது, சுற்றுப்புறங்களில் தேவையில்லாத பொருள்களை தண்ணீர் தேங்கும் வகையில் போடக் கூடாது என அறிவுறுத்தினார். பின்னர், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பொது மக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினார். இதனை நாள்தோறும் பருகும்படி கேட்டுக் கொண்டார்.
   ஆய்வின்போது, வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) கருப்பையா, சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜே.பிரபாகரன், திருவள்ளூர் வட்டாட்சியர் தமிழ்செல்வன், உதவி ஆட்சியர் வசந்தி, கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ், அரசு அலுவலர்கள், டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணியாளர்கள் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai