Enable Javscript for better performance
கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் 15-இல் மக்கள் தொடர்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் 15-இல் மக்கள் தொடர்பு முகாம்

    By  திருத்தணி,  |   Published on : 12th November 2017 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தணி ஒன்றியம், கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சியில், வருவாய்த் துறை சார்பில், புதன்கிழமை (நவம்பர் 15) மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமுக்கு, ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்து, கிராம பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார்.
     மேலும், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
     முகாமில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.
     எனவே, கிருஷ்ணசமுத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் வழங்கலாம். மேற்கண்ட தகவலை திருத்தணி வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai