சுடச்சுட

  

  குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் முகாம்: 223 பேர் மனுக்கள் அளிப்பு

  By  திருவள்ளூர்,  |   Published on : 12th November 2017 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் மாவட்டத்தில் வட்டம்தோறும் சனிக்கிழமை நடந்த குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாமில் மொத்தம் 223 பேர் மனுக்கள் அளித்தனர்.
   திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் நோக்கில், வட்டந்தோறும் குறிப்பிட்ட கிராமங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் திருவள்ளூர் வட்டத்தில் ஓதிக்காடு கிராம நிர்வாக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமுக்கு, வட்ட வழங்கல் அலுவலர் உமா தலைமை வகித்தார். இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பாக 29 மனுக்கள் வரை பொதுமக்கள் அளித்தனர். இந்த மனுக்கள் மீது உடனடியாக இணையதளம் மூலம் உடனடித் தீர்வு காணப்பட்டன. இந்த முகாமில், வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
   ஊத்துக்கோட்டை-கோட்டை குப்பத்தில் நடைபெற்ற முகாமில் 15, பூந்தமல்லி-பாரிவாக்கத்தில் 33, திருத்தணி-அலமேலுமங்காபுரம் கிராமத்தில் 12, பள்ளிப்பட்டு-பாண்டாபுரம் கிராமத்தில் 14, பொன்னேரி-வன்னிப்பாக்கம் கிராமத்தில் 42, கும்மிடிப்பூண்டி-ஆரம்பாக்கம் கிராமத்தில் 54, ஆவடி-பிரகாஷ் நகர் 1கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடந்த முகாமில் 24 மனுக்கள் என மொத்தம் 223 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
   இந்த மனுக்கள் மீது உடனடியாக இணையதளம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai