சுடச்சுட

  

  "சுற்றுப்புறச்சூழல் சுகாதாரச் சீர்கேடு டெங்கு காய்ச்சலுக்கு முக்கியக் காரணம்'

  By  திருவள்ளூர்  |   Published on : 12th November 2017 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுற்றுப்புறச்சூழல் சுகாதாரச் சீர்கேடே டெங்கு காய்ச்சலுக்கு முக்கியக் காரணம் என துணை ஆட்சியரும், நகராட்சி டெங்கு தடுப்பு கண்காணிப்பு அலுவலருமான வசந்தி குறிப்பிட்டார்.
   திருவள்ளூர் நகராட்சி சுகாதாரத் துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
   டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குடியிருப்புகளில் சுற்றுப்புறச்சூழல் சுகாதாரமின்றி இருப்பதே டெங்கு காய்ச்சலுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. குடிநீரை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையிலான பழைய பொருள்களை தேவையில்லாத இடங்களில் போட்டு வைக்கக் கூடாது. இதுகுறித்து மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
   இதைத் தொடர்ந்து, நகராட்சி மருத்துவர் சரண்யா டெங்கு முன்னெச்சரிக்கை குறித்து எடுத்துரைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமை ஆசிரியர் மாலதிராயன் தலைமை வகித்தார். திருவள்ளூர் நகராட்சி சுகாதாரக் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
   நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ரமேஷ், செவிலியர்கள் அன்னபூரணி, பரிமளா, ஷாலு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai