திருப்பேர் கிராமத்தில் குடிநீர் தொட்டிகள் திறப்பு
By திருவள்ளுர், | Published on : 12th November 2017 01:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவள்ளூர் அருகே தொண்டு நிறுவனம் சார்பில், திருப்பேர் கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து 3 புதிய குடிநீர்த் தொட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
திருவள்ளூர் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது திருப்பேர் கிராமம். இங்கு அரசு அனுமதியுடன் ஒருங்கிணைந் த கிராம சமுதாய சேவை வளர்ச்சி நிறுவனம் (ஐ.ஆர்.சி.டி.எஸ்) சார்பில், ரூ. 3.50 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு மற்றும் 3 புதிய குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், பூண்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் தலைமை வகித்து, குடிநீர்த் தொட்டிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் பேசுகையில், கிராமங்களில் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், தவறாமல் வீடுகள் தோறும் தனிநபர் கழிப்பறை அமைத்து பயன்படுத்த முன்வர வேண்டும் என்றார்.
இதில், கனடாவில் உள்ள தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரேன்ட் ரேச்சல், பொன்னேட்டா போனர் பெல், பீட்டர் கார்ல்ஸ் ஆகியோர் பங்கேற்று, அந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் கலந்துரையாடினர். இதற்கான ஏற்பாடுகளை ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் டைட்டஸ், திட்ட மேலாளர் ஸ்டீபன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.