சுடச்சுட

  

  அம்பத்தூரில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்து 4 சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார்.
   அம்பத்தூர், திருவேங்கடம் நகர், நேருநகர் 7-ஆவது தெருவைச் சேர்ந்த லட்சுமி நாராயணனின் மனைவி மரகதலட்சுமி ( 57). இவர், சனிக்கிழமை காலை திருவேங்கட நகர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், மரகதலட்சுமியின் கழுத்திலிருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார்.
   இதுகுறித்து மரகதலட்சுமி, அம்பத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் கந்தகுமார், வழக்குப் பதிந்து, மர்ம நபரைத் தேடி வருகிறார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai