சுடச்சுட

    

    மழையால் சேதமடைந்த கொசஸ்தலை ஆற்றுப்பாலம்

    By  திருவள்ளூர்,  |   Published on : 12th November 2017 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    n14

    கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மழையால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     திருவள்ளூர் அருகே ஒதப்பை கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இப்பாலமானது, திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, சத்தியவேடு, கும்மிடிப்பூண்டி, நாகலாபுரம், புத்தூர், திருப்பதி ஆகிய பகுதிகளுக்குச் செல்வதற்கான பிரதான வழியாக உள்ளது. அத்துடன், இச்சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களும், பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பாலம் அமைக்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
     தற்போது, கடந்த சில நாள்களாக பெய்த வடகிழக்குப் பருவமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாலத்தின் அடிப்பகுதியில் தரையில் போடப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், அடிப் பகுதி கான்கிரீட் பரப்புகளும் பெயர்ந்து சேதமடைந்தன. இதனால் பாலத்தை தாங்கி நிற்கும் அடித்தள தூண்கள் அமைந்துள்ள பகுதியிலும் ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளன. இதனால் தூண்கள் சேதமடைந்து, பாலம் வலுவிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
     இந்த வழித்தடத்தில் அடிக்கடி பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் சென்று வருவதால், சேதமடைந்த பகுதியை நெடுஞ்சாலைத் துறையினர் விரைவில் சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai