சுடச்சுட

  

  முதல் முறையாக நிரம்பியது புட்லூர் தடுப்பணை

  By  திருவள்ளூர்,  |   Published on : 12th November 2017 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  n15

  கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழையால் ஏரிகள் நிரம்பியதையடுத்து, உபரி நீர் வரத்தால் திருவள்ளூர் அருகே உள்ள புட்லூர் தடுப்பணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
   குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில், புட்லூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே வெள்ள நீரைத் தேக்கி வைக்கும் வகையில் தடுப்பணை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்தது. இதனையேற்று அரசு ரூ. 5.50 கோடியில் பொதுப்பணித் துறை மூலம் கடந்த ஆண்டு புதிதாக தடுப்பணை கட்டப்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாள்களாக பெய்த வடகிழக்குப் பருவமழையால் கூவம், நரசிங்கபுரம், பிஞ்சிவாக்கம், சத்தரை ஆகிய பகுதிகளில் ஏரிகள் நிரம்பி உபரிநீர் கூவம் ஆற்றில் வந்தது. இதையடுத்து, முதன் முதலாக புட்லூர் தடுப்பணையில் நீர் நிரம்பியது. இதனால் விவசாயக் கிணறுகளிலும், குடிநீர் ஆதாரமும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், இப்பகுதியில் உள்ள மணவாளநகர், திரூர், அரண்வாயல், வெங்கத்தூர், காக்களூர் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கும், குடிநீர் ஆதாரம் உயருவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
   இந்நிலையில், தடுப்பணை முதல் முறையாக நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால், இந்த தடுப்பணையைப் பார்க்க புட்லூர், அரண்வாயல் குப்பம், அரண்வாயல், ஜமீன் கொரட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு மீன்களை பிடித்துச் செல்கின்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai