சுடச்சுட

  

  செங்குன்றத்தில் இரு வேறு தரப்பினரிடையே தகராறு ஏற்படாமல் இருக்கவும், கட்டுப்படுத்தும் வகையிலும், முன்னெச்சரிக்கையாக போலீஸார் சனிக்கிழமை கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
   திருவள்ளூர் மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் செல்லா கோஷ்டியும், கதிர் கோஷ்டியும் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.
   இந்த கோஷ்டிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இவர்களுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மாதவரம் துணை ஆணையர் கலைச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது.
   இதையடுத்து , செங்குன்றம் காவல் ஆய்வாளர் சுரேந்தர் தலைமையிலான காவலர்கள், இரு கோஷ்டிகளைச் சேர்ந்த நந்தகோபால் (27), முருகன் (21), சந்தீப் (22), சிவக்குமார் (26), மணிகண்டன் (23), கார்த்திக் (29), தினேஷ்குமார் (24), சிவா (25) உள்ளிட்ட 11 பேரை கைது செய்து புழல் சிறையில் வைத்தனர்.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai