Enable Javscript for better performance
லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: பயணிகள் உயிர் தப்பினர்- Dinamani

சுடச்சுட

    

    லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: பயணிகள் உயிர் தப்பினர்

    By  மாதவரம்,  |   Published on : 12th November 2017 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புழல் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
     சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து செங்குன்றத்தை அடுத்த காரனோடையை நோக்கி தடம் எண் 57 எப். மாநகரப் பேருந்து சனிக்கிழமை மதியம் சென்று கொண்டிருந்தது. சோழவரத்தை அடுத்த ஞாயிறு கிராமம் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த குமார் (55) பேருந்தை ஓட்டினார்.
     திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயராமன் (46) நடத்துனராக இருந்தார். இப்பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். புழல் காவாங்கரை ஜி.என்.டி. சாலையில் வந்தபோது, பேருந்துக்கு முன்னால் சென்ற சென்ற லாரி திடீரென மெதுவாக சென்றது.
     அப்போது பின்னால் வேகமாக வந்த அரசுப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறம் மோதியது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் குமார் பலத்த காயங்களுடனும், நடத்துநர் உள்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடனும் உயிர் தப்பினர்.
     இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் சித்ரா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai