சுடச்சுட

  

  10 நாளாக குடிநீரின்றி தவிக்கும் இருளர் சமுதாய மக்கள்

  By  மதுராந்தகம்  |   Published on : 12th November 2017 02:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுராந்தகத்தை அடுத்த காவாதூர் ஊராட்சியில் கடந்த 10 நாள்களாக குடிநீர் வராததால் இருளர் சமுதாய மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
   காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உள்பட்ட காவாதூர் ஊராட்சியில் இருளர் குடியிருப்புப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஊராட்சியின் சார்பில், குடிநீர் கிணறு அமைத்து, அதன்மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
   இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன் குடிநீர் கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் இருளர் இன மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீரை வழங்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள விவசாயக் கிணறுகளில் இருந்தும், அரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும் பெண்கள் தண்ணீரை குடங்களில் சுமந்து செல்லும் நிலை உள்ளது. இங்குள்ள சிறுமின் நீர்த் தேக்கத் தொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து, சீரமைக்கப்படாமல் உள்ளது. அதனை அப்போதே சீரமைத்திருந்தால் இதுபோன்ற சமயத்தில் சமாளித்திருக்கலாம்.
   இதுகுறித்து, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு, பழுதடைந்த மின்மோட்டார்களை சீரமைக்கவும், சிறுமின் நீர்த் தேக்கத் தொட்டிகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருளர் சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai