சுடச்சுட

  

  "உச்சநீதிமன்ற உத்தரவுகளை கடைப்பிடிக்காத ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை'

  By  மாதவரம்,  |   Published on : 13th November 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உச்சநீதிமன்றக் குழுவின் உத்தரவுப்படி நடக்காமல் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் தெரிவித்தார்.
   செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், முருகேசன் ஆகியோர் மணலி, மாதவரம், செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் ரூ. 25 லட்சத்துக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் கூறுகையில், உச்சநீதிமன்றக் குழுவின் அறிவுறுத்தலின்படி, குடிபோதையில் அல்லது போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனம் ஓட்டுதல், அபாயகரமான முறையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனத்தில் அதிக எடை ஏற்றிச் செல்லுதல், சரக்கு வாகனத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக நபர்களை ஏற்றுதல், செல்லிடப்பேசியை பயன்படுத்தி வாகனம் ஓட்டுதல், சிகப்பு விளக்கினை கடந்து செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை செய்யும் ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து விதிகள் குறித்தும், சாலைப் பாதுகாப்பு குறித்தும் ஓட்டுநர் உரிமம் பெற வருபவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. புதன்கிழமைதோறும் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai