கூடப்பாக்கத்தில் 'அம்மா' திட்ட முகாம்
By திருவள்ளூர், | Published on : 13th November 2017 12:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவள்ளூர் அருகே கூடப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 140 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த முகாமில் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பூந்தமல்லி வட்டாட்சியர் கார்குழலியிடம் வழங்கினர். இந்த முகாமில் முதியோர் ஓய்வூதியத் தொகை, பட்டா பெயர் மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, ஜாதி சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் போன்ற 140 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
இதில் ஜாதி சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் என தகுதியான 40 மனுக்கள் மீது உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 100 மனுக்கள் அந்தந்த துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முகாமில் பூந்தமல்லி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் திருநாவுக்கரசு, கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.