சுடச்சுட

  

  திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவு வார விழா செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து 7 நாள்களும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
   மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைக்கும் வகையில், ஆண்டுதோறும் கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா நிகழாண்டில் நவம்பர் 14-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
   இதை முன்னிட்டு ரத்த தான முகாம், கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தல், சிறுதொழில் செய்வோர், பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் மகளிர் குழு க்கள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
   இதில் பொதுமக்கள் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க இருப்பதாகவும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai