சுடச்சுட

    

    சொந்த செலவில் சுடுகாட்டுப் பாதையை சீரமைக்கும் இளைஞர்கள்

    By  திருத்தணி,  |   Published on : 13th November 2017 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தணி அருகே சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையைச் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன் வராத நிலையில், அப்பகுதி இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
     திருத்தணி நகராட்சி, 9-ஆவது வார்டில் உள்ளது ஜோதிநகர். இப்பகுதியில், 200- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் சுடுகாட்டுக்குச் செல்வதற்கு சாலை வசதி இல்லை. சுடுகாடு செல்லும் பாதையில் முள்புதர்கள் வளர்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
     சுடுகாட்டுப் பாதையை ஆக்கிரமித்துள்ள முள்புதர்களை அகற்றி, சாலை அமைத்துத் தருமாறு இப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி ஆணையரிடம் மனுக்கள் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
     இதனால், ஜோதி நகர் பகுதி இளைஞர்கள் ஒன்று கூடி தங்களது சொந்த செலவில் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாள்களாக, 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முள்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பாதை அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடைபெறுகின்றன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai