சுடச்சுட

    

    தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை: 9 பேர் கைது

    By  திருவள்ளூர்  |   Published on : 13th November 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் பகுதியில் அரசு அனுமதியின்றி கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 239 போதை பொருள்கள் கொண்ட பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
     திருவள்ளூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் மற்றும் போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவிட்டார்.
     இதன் அடிப்படையில், கடம்பத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சதாசிவம், கடம்பத்தூர் ரயில் நிலையம், பஜார் பகுதியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள ஒரு கடையில் ஆய்வு செய்தார். அப்போது, தடை செய்யப்பட்ட போதை பாக்குகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கடம்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து, பன்னீர்செல்வம் (55), கோவிந்தம்மாள் (35) ஆகியோரை கைது செய்தனர்.
     இதேபோல், கிருஷ்ணகுமார் (42), அமாவாசை (40), சண்முகம் (55), குமார் (47), சோலையப்பன் (42), விநாயகம் (45), ஏகாம்பரம் (45) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
     மேலும், இவர்களிடம் இருந்து மொத்தம் 239 போதைப் பாக்குகள் கொண்ட பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai