சுடச்சுட

  

  பூண்டி ஒன்றியத்தில் டெங்கு தடுப்புப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

  By  திருவள்ளூர்  |   Published on : 13th November 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் டெங்கு மற்றும் தொற்றுநோய் பணிகள் குறித்து ஆட்சியர் எ.சுந்தரவல்லி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
   திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொது சுகாதாரத் துறை சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், ஒவ்வொரு பகுதியிலும் குடியிருப்புகள்தோறும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
   இதேபோல், திருவள்ளூர் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் டெங்கு தடுப்புப் பணிகள் குறித்து ஆட்சியர் எ.சுந்தரவல்லி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் பூண்டியில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு குறித்த சிறப்பு முகாமில் ஒவ்வொரு வீடு, வீடாகச் சென்று சுகாதாரக் கேடுகள் ஏற்படுத்தும் வகையில் தேவையில்லாத பொருள்களை போட்டு வைக்கக் கூடாது என பொதுமக்களிடையே எடுத்துரைத்தார். அதையடுத்து, அப்பகுதி பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கி, அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து நிலத்தடி நீர்த் தேக்கத் தொட்டியில் தேக்கி வைத்துள்ள நீரின் தன்மையை பார்வையிட்டார். அதேபோல், தேவையற்ற டயர்கள், பிளாஸ்டிக் பொருள்கள், நீர் தேங்குவதற்கு ஏதுவாக இருக்கும் பொருள்களை அப்
   புறப்படுத்தவும், தூய்மைக் காவலர்கள் மற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
   இந்த ஆய்வின்போது, பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜே.பிரபாகரன், திருவள்ளூர் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் கிருபா உஷா, கொசு ஒழிப்புப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai