சுடச்சுட

  

  பெரியபாளையத்தில் பன்றிகள் தொல்லையால் மக்கள் அவதி

  By நமது நிருபர், கும்மிடிப்பூண்டி  |   Published on : 13th November 2017 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையம் குடியிருப்புப் பகுதிகளில் பன்றிகள் தொல்லையினால் பலரும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
   பெரியபாளையத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
   இங்கு, பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், தர்மராஜா கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளதால், தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து போகின்றனர்.
   இந்நிலையில், தொடர் மழை காரணமாக இங்குள்ள பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது.
   அத்துடன், பன்றிகள் நடமாட்டத்தினால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
   இங்குள்ள அரசு மருத்துவமனைப் பகுதி, பவானி அம்மன் கோயிலின் பின்பகுதி, பாரதி நகர் பகுதி ஆகிய இடங்களில் பன்றிகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகள் கொட்டப்படும் இடங்கள் மற்றும் புதர் மண்டிக்கிடக்கும் இடங்களில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன.
   இவை, குப்பைக் கழிவுகளைக் கிளறி துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு, பன்றிக் காய்ச்சல் பீதியில் மக்கள் உள்ளனர்.
   பெரியபாளையம் பகுதியில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் நேரடி மேற்பார்வையில் நிர்வாகம் செயல்பட்டு வந்தபோது, சுகாதாரப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வந்தன. ஆனால், தற்போது தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடக்காமல் உள்ள சூழலில் சுகாதாரப் பராமரிப்பு பணிகள் தொய்வடைந்துள்ளன.
   பன்றிகளின் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைக்கவும், பன்றிகளை வளர்ப்போர் அவற்றைக் குடியிருப்புப் பகுதிகளில் உலவ விடாமல் தடுக்கவும் சுகாதாரத் துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai