சுடச்சுட

  

  அபாய நிலையில் சோழவரம் ஏரி; பொதுப்பணித்துறை அலட்சியம்: மல்லை சத்யா புகார்

  By  மாதவரம்  |   Published on : 14th November 2017 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சோழவரம் ஏரியை ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா பார்வையிட்டார்.
   கனமழையின் காரணமாக அபாய நிலையில் இருக்கும் சோழவரம் ஏரியை திங்கள்கிழமை பார்வையிட்ட பின் மல்லை சத்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   சோழவரம் ஏரி முழு கொள்ளளவை எட்டினால் கரை உடையும் அபாய நிலையில் உள்ளது. இந்த ஏரி உடைந்தால், செங்குன்றம், சோழவரம், காரனோடை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
   உடனே, ஏரியின் கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கன மழை குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல்கள் அளித்து வரும் நிலையில் ஏரிகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? பொதுப்பணித்துறை அலட்சியமாக ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது.
   இது தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் காட்டுகிறது என்றார்.
   அப்போது, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், டி.சி.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பி.ஜி.ஆனந்தன், விஜயராகவன், ஏ.வி.ராஜன், வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai