சுடச்சுட

  

  கிராம மக்கள் சார்பில் ஆசிரியருக்குப் பாராட்டு

  By  திருவள்ளூர்,  |   Published on : 14th November 2017 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் அருகே பல்வேறு எதிர்ப்புகளை மீறி உயர் நீதிமன்றத்தில் குற்றவாளி இல்லையென விடுதலையான இயற்பியல் ஆசிரியருக்கு கிராம பொதுமக்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது .
   திருவள்ளூர் அருகே கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றியவர் ஜி.பழனிச்சாமி. இவர் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகாரையடுத்து, கீழவை நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்றையீடு செய்ததையடுத்து, அவர் குற்றவாளி இல்லையென விடுதலையானார்.
   இதனை வரவேற்கும் வகையில், பாக்கம், புலியூர் கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் சார்பில், ஆசிரியர் பழனிச்சாமிக்கு பாக்கம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, புலியூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் சீனிவாசன், பாக்கம் கிராம முன்னாள் ஊராட்சித் தலைவர் திருமஞ்சு அருள்தாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
   நிகழ்ச்சியில், சேவாலயா அறங்காவலர் முரளிதரன், சட்டப்பேரவை உறுப்பினர் மணிமாறன், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai